என் இனிய நண்பர்களே ,
நலமா ? பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது. பல மாதங்களாக வலை எழுதவில்லை.காரணம் சொன்னால் பலர் திட்டுவார்கள் .. ஏனென்றால் சாக்கு சொல்வது பலருக்கு பிடிக்காமல் போலாம். எனவே சாக்கு சொல்லபோவதில்லை. நான் பல மாதங்கள் எழுதவில்லை என்றாலும் பல நண்பர்கள் என் வலைக்கு வந்தனர் . அதற்காக அவர்களுக்கு நன்றி.
பொன்னியின் செல்வன் :
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை இரண்டாம் முறையாக முடித்து விட்டேன் . அது ஒரு வரலாற்றுக் கதை. இராஜராஜ சோழன் என்ற பொன்னியின் செல்வன் என்ற தமிழ் மன்னனின் கதை.ஆனால் வந்திய தேவன் என்ற ராஜ்யம் இல்லாத வல்லவரையன் அரச குடும்பத்தை சேர்ந்த வாலிபனை சுற்றியே கதை செல்கிறது.அதில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் என்றால் அது ஆழ்வார்க்கு அடியான். அவன் ஓர் அரச ஒற்றன். தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
தில்லு முல்லு:
சூப்பர் ஸ்டார் ( Super Star ) ரஜினி காந்த் நடித்த முதல் நகைச்சுவை படம். ரஜினியின் குரு இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் அறிவுரையால் ரஜினி இப்படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. நல்ல திரை படம் . வேலைக்காக ரஜினி மீசையை வைத்து பல தில்லு முல்லு செய்வது தான் படத்தின் ஒரு வரி கதை.ரஜினி தவிரை வேறு யாருக்காக இப்படம் பார்க்கலாம் என்றால் ரஜினியின் முதலாளியாக வரும் தேங்காய் ஸ்ரீனிவாசன்காக பார்க்கலாம். தேங்காய் ஸ்ரீனிவாசனின் முக நடிப்பு ( Face Reaction ) படத்தில் நன்றாக இருக்கும்.அது இப்போது உள்ள நடிகர்களிடம் பார்க்க முடியாத விஷயம். முழு படம் பார்க்க முடியாதவர்கள் ரஜினியின் நேர்காணல் ஆவது பார்க்க வேண்டும். எனக்கு பிடித்த காட்சி அதுதான். படம் மொக்கையாக இல்லாமல் உண்மையாகவே நகைச்சுவையாக இருக்கும். முடிந்தால் பாருங்கள்.
கொலைவெறி:
பெயரை பார்த்தவுடன் பலருக்கு தனுஷ் பாடிய 3 படத்திற்கான பாடல் தான் ஞாபகம் வரும்.கவலை படவேண்டாம் அதை பற்றி தான் எழுத போறேன். இப்பாடல் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டது.இதன் முழு காரணம் தனுஷ் பாடியதாலும் இணைய தளத்தில் வெளியிட்டதாலும் தான்.நான் நேற்று மாலை Headlines Today என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் பார்த்த பொழுது மூன்று முதல் நான்கு மணி வரை கொலைவெறி பற்றி தான் செய்தி. கொலைவெறி பாடல் எப்படி நாடு முழுவதும் பிரபலம் ஆனதை பற்றி ஒரு நிகழ்ச்சி.பல வடஇந்தியர்களுக்கு பாடல் சுலபமாக இருப்பதால் பிடித்துருக்கிறது .சிலருக்கு அது நகைச்சுவையாக இருந்தது. பிரபல பாடகி ( பெயர் தெரியவில்லை ) அப்பாடலாவது இந்தியாவை ஒன்று சேர்த்ததாக கூறி பெருமை பட்டார்.ஆனால் பலருக்கு ( வடஇந்தியர்களுக்கு ) கொலைவெறி என்றால் என்னவென்றே தெரியவில்லை.அவர்களாக ஒரு அர்த்தம் தேடி கொண்டனர்.அதுவும் சரியாகவே இருந்தது . எனக்கும் இந்த பாடலை பிடித்துள்ளது.
இப்போதிக்கு அவ்வளவு தான்.மீண்டும் சந்திப்போம்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் !!!