Sunday, February 19, 2012

என்னை கவர்ந்தவை..- இரண்டாம் பகுதி

என் இனிய நண்பர்களே ,
நலமா ? இன்று என்னை கவர்ந்த மற்றவை பற்றி கூற போகிறேன். நான் கடந்த இரண்டு மாதங்களாக படித்த புத்தகங்கள் பற்றி கூற போகிறேன்.நான் முதல் முதலில் கதைகளை பற்றி எழுதுவதால் ஏதும் பிழை இருப்பினும் மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

கன்னி மாடம் :
கன்னிமாடம் என்பது ஓர் நாட்டின் இளவரசியை  ஒரு கோட்டையில் வைத்து அதற்கு பாதுகாவலாக ஒரு படையும் கொடுப்பார்கள்.அந்த படை அந்த இளவரசிக்கு தான் பனி வணங்கும். நாட்டை ஆளும் அரசனுக்கு கூட அடிபணியாது.
     
இதன் கதை பின்வருமாறு ஒரு காலத்தில் (16 நூற்றாண்டு என்று நினைக்குறேன் , படித்தது மறந்து விட்டது ) பாண்டிய நாடும் இரண்டாக பிரிந்து கடந்தது . வடக்கே குலசேகர பாண்டியனும் தெற்கே வீர பாண்டியனும் ஆண்டனர். அவர்களுக்குள் பகை இருந்தது. இருவருக்கும் போர் வர , இதை சாக்காக வைத்து இலங்கை அரசன் , வீரபாண்டியனுக்கு உதவுவது போல் நடித்து தமிழ்நாடை தன் எல்லைக்குள் கொண்டு வர பார்க்கிறான்.இதை உணர்ந்து கொண்ட சோழ நாடு எப்படி சிங்கள நாட்டவரை தமிழகத்தை விட்டு விரட்டுகிறது என்பது தான் கன்னி மாடத்தின் கதை கரு.
   
இதில் வரும் அபராஜித பல்லவன் (கதையின் நாயகன் ) திறமையை  காணும் பொழுது எனக்கு இந்த நாவலை எழுதிய சாண்டில்யனின் இன்னொரு நாவலான இராஜ முத்திரையில் வரும் வீர பாண்டியனின் (வேற வீர பாண்டியன் )திறமை தான் நியாபகம் வரும் ஏனெனில் இருவருடைய குணாதிசயம் ஒன்று போல் இருக்கும் . கன்னி மாடத்திற்கும் இந்த கதைக்கும் என்ன உறவு என்பதை நீங்கள் படித்துதான் உணரவேண்டும் . இந்த கதையை எழுதியது சாண்டில்யன் அவர்கள்.   

இராஜ முத்திரை : 

கன்னி மாடத்தில் இராஜ முத்திரை பற்றி கூறி இருப்பதால் அதன் கதையை பற்றி கூற போகிறேன். இராஜ முத்திரையை எழுதியதும் சாண்டில்யன் தான். இராஜ முத்திரை படித்து இரண்டு வருடங்கள் இருப்பதால் என் நினைவில் உள்ளதை கூற போகிறேன் .பிழை இருப்பினும் மன்னிக்க வேண்டும்.

சிற்றரசனாக இருக்கும் பாண்டிய மன்னனும் அவன் தம்பி வீர பாண்டியனும் ( இளவரசன் ) தங்கள் நாட்டை பெரிய சாம்ராஜ்யமாக ஆக்க ஆசை படுகிறார்கள் .அதற்காக அவர்கள் படை மற்றும் செல்வம் சேர்க்கையில் அதை களவாடுகிறான் சேரன். ஆனாலும் ஒரு சிறு படையை வைத்து சேர நாட்டை கைபற்றுவது தான் இராஜ முத்திரை கதை.பாண்டியனுக்கு உதவுவதற்கு தங்கள் இளவரசனை அனுப்புகிறது இலங்கை அரசு .இதில் வீரபாண்டியனின் வீரதீர போர்முறையை படிக்கும் பொழுது நமக்கு புல்லரிக்கும்.


அடுத்த வலை பதிவில் மேலும் பல புத்தகங்கள் பற்றி சொல்கிறேன். தொடரும்...


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் !!!
நன்றி !!