Tuesday, August 30, 2011

என் முதல் எழுத்து !!!

என் இனிய நண்பர்களே ,

நான் வலை எழுதி பல நாட்கள் ஆகி விட்டது.இந்த வலைப்பதிவை  ஐ தமிழில் எழுதலாம் என்று எண்ணி உள்ளேன்.  இந்த பதிவில்  யில் நான் எப்படி எழுத்தில் ஆர்வம் பெற்றேன் என்று கூற போகிறேன்.

முதல் முதலில் நான் படிக்கச் ஆரம்பித்தது இரண்டாம் வகுப்பில் என்று நினைக்குறேன். நான் என் அப்பாவின் கடைக்கு செல்லும் பொது அவர் சில சமயம் தினமலரின் முக்கிய தலைப்பை வாசிக்க சொல்லவர்.அதுதான் என் முதல் வாசிப்பு என்று நினைக்குறேன்.(கல்வியை தவிர).பின்பு தினமலர் நாளிதழ் இலவச இணைப்பாக வரும் சிறுவர் மலரில் உள்ள படக் கதைகளை படிக்க ஆரம்பித்தேன்.கொஞ்சம் கொஞ்சமாக மற்ற கதைகளை  படிக்க ஆரம்பித்தேன்.

இச்சமயத்தில் நான் மற்றொரு பழக்கத்தை சொல்லி ஆகா வேண்டும்.எங்கள் வீட்டில் வெள்ளி கிழமை தோறும் நடக்கும் நிகழ்ச்சி இது. யாரு முதலில் சிறுவர்   மலரை படிப்பது என்று தான்.பேப்பர் காக நான் வெயிட் பண்ணுவேன்.வந்த உடன் நான் சிறுவர் மலரை வீட்டில் ஒளித்து வைத்து விடுவேன். பள்ளிக்கு சென்று வந்த பிறகு உடனேயே மலரை படிக்க  வேண்டும் என்ற ஆர்வத்தில். இந்த விசயத்தில் எனக்கும் என் பெரியம்மாவுக்கும் செல்ல சண்டை நடக்கும்.(அப்பொழுது ஒரே வீட்டில் ஒரே மாடியில் இருந்தோம்).யார் முதலில் மலரை படிப்போம் என்று.இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக தான் வருகிறது.வெள்ளி கிழமை மலரை படிக்க விட்டால் எனக்கு தூக்கம் வராது. பின்பு தினமலரை வாங்குவதை விட்டுவிட்டோம் அதற்கு வேறு காரணம் உண்டு . 

பின்பு ஆங்கில சிறு கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன்.நான்  சிறுவயதில் இருக்கும் பொழுது படிக்க சொன்னால் நடத்தியதை படிக்காமல் நடத்தாததை பாடத்தை படிப்பேன்.எங்கேயாவது  எதாவது எழுதிருந்தால் உடனையே அதை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.நான் அசோகா கதைகளை பஞ்சதந்திர கதைகளை அப்பொழுதே முடித்து விட்டேன்.வீட்டிலயே நான் தான் வேகமாக படிப்பேன்.

நான் அடுத்த கட்டம் ( அதாவது நாவல் ) படிக்க ஆரம்பித்தது பத்தாம் வகுப்பில் தான். நான் அப்பொழுது அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புத்தகத்தை படித்தேன்.அற்புதமான கதை.  என்ன கற்பனை. அந்த நாவல்  எனக்கு ஒரு புது பாதையை காட்டியது. பத்து நாளில் அந்த கதையை படித்தேன். அது 2000 பக்கங்கள் கொண்டது.தமிழ் ஆர்வம்   உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
  
அடுத்த புத்தகம்  தேவி பாகவதம். அது  கடவுளை பற்றியது.எனக்கு  புராண கதைகள் என்றால் பிடிக்கும், அதனால் தான்   அதை படித்தேன். அது  செந்தமிழில் எழுதியது.அப்  அப்பா.. ஒரு  வார்த்தை இப்பொழுது உள்ள 2 வரிகளுக்கு சமமானது.அதாவது  ஒரு வார்த்தையில் 50 60 எழுத்தக்கள் இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.நான்   படித்த ஒரே செந்தமிழ் புத்தகம் என்றால் அது தேவி பாகவதம் தான். அதன் எழுத்தாளர் யார்  என்று தெரியவில்லை.11th பரிச்சை வந்ததால் அதை  முழுதாக படிக்க முடியல.

பின்பு  சாண்டில்யன் எழுதிய ராஜ முத்திரை ,கடல் புறா ஆகியவற்றை படித்தேன்.இரண்டுமே சரித்திர நாவல்கள்.

கல்லுரியில்...

நான் கல்லூரிக்கு சென்ற  பிறகு தமிழ் நாவல்களை சற்று நிறுத்தி விட்டு ஆங்கில நாவல்களை படிக்க ஆரம்பித்தேன்.அதற்கு ஊக்கமும் புத்தகமும் குடுத்தது என் இனிய நண்பர் கார்த்திக்.சு.முதலில் அவர் கொடுத்தது டேன் பிரவுன் எழுதிய டா வின்சி கோடு (Dan Brown's Da Vinci Code).அவ்வப் பொழுது ஆங்கில  நாவல்களை அவரிடம் வாங்கி படித்தேன்.
அவரின் மூலம் எனக்கு பிடித்த எழுத்தாளர் சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon )
ஆங்கில விரும்பிகள் அவர் நாவலை படிக்க ஆரம்பிக்கலாம்.

ஹர்ரி போட்டர்( harry potter ) என்ற நாவலை படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வெகுநாட்களாக இருந்தது.அது  இ புக்(E book )  ஆக தான் கிடைத்தது. இ புக் என்றால் கணினியில் தான் படிக்க முடியும். நான்  7 பாகங்களையும் கணினியில் தான் படித்தேன்.அத்தனை படிக்கும் ஆர்வம்.
இப்பொழுது கல்கியின் பொன்னியின் செல்வனை மீண்டும் இ புக்ல தான்
படிக்குறேன்.

என்னடா இவன் முதல் எழுத்துங்க்ரன், படிச்சதலாம் எழுதுறான்னு  நீங்க நினைக்கலாம். ஆனா படிச்சா தானே எழுத முடியும். அதுக்கு தான் இதலாம் சொல்றேன்.இந்த வலைபதிவு   தான் என்னோட முதல் அதிகாரபூர்வமான எழுத்து.இதற்கு காரணம் கார்த்திக்.சு.தான்.

நன்றி !!!

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!!! 



  

3 comments:

  1. dei... appreciate ur effort... one honest advice... tamila eludaradha vitru.... please.... try in eglsih itself...

    ReplyDelete
  2. விமல் தமிழில் எழுத முயற்சி எடுத்துக்கொண்டமைக்கு மிக்க பாராட்டுக்கள் ....
    இந்த வலைப்பதிவை மேலும் தமிழில் தொடருமாறு வேண்டிக்கொள்ளும் தமிழ் தாசன் :)

    ReplyDelete
  3. "தமிழில் எழுத முயற்சி எடுத்துக்கொண்டமைக்கு மிக்க பாராட்டுக்கள்"

    ReplyDelete