Thursday, June 30, 2011

என் முதல் காவல் அனுபவம்

என் இனிய நண்பர்களே,
                   இதனை பார்த்தவுடன் நான் குற்றவாளி என்று என்னை நினைத்துவிடவேண்டாம்.இது என் காவல் நிலையத்தில் நான் சென்ற அனுபவம்.நான் ஒரு mechanical engineering மாணவன்.நான் ஒரு தொழிற்சாலை      பயிற்சி எடுப்பது என் வாழ்க்கைக்கு உதவும் .நான் ஒரு பிரபல நிறுவனத்தில் In Plant Training சென்றேன்.In Plant Training என்பது ஒரு நிறுவனத்தில் பயிற்சி எடுத்துக்கொள்வது .அது அரசின் பாதுகாப்பு படையின் நிறுவனம் அதனால் என் வீட்டின் அருகாமையில் உள்ள  காவல் துறையிடம் நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்ற சான்றிதழை  வாங்கி வருமாறு அந்நிறுவனம் கேட்டது. இதற்காக தான் நான் காவல் நிலையத்திற்கு சென்றேன்.
     நானும் என் நண்பன் வித்தியார்தாவும் எங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றோம். என் நண்பன்  வித்தியார்தா எனக்கு துணையாய் வந்தான்.நான் முதலில் காவல் நிலையம் சினிமாவை போல் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அங்கு பல பிரிவுகள் உள்ளது. அங்கு எங்கே செல்வது என்று தெரியாமல் முதலில் உள்ள அறைக்கு சென்றோம். அங்கே ஒருவர் எங்களிடம் விசாரித்தார்.நாங்கள் முன்னால்லே சான்றிதல் கொண்டு சென்றோம் .
அதற்கு  அவர்,"தம்பி  நீயாக certificate கொண்டு வரக்கூடாது"
                              "சாரி சார், தெரியாமல் கொண்டு வந்தேன்." ( நான் முன்னாடியே சான்றிதல் அடித்து கொண்டு சென்றேன் )   
                             "சரிப்பா அடுத்த ரூம்ல inspector இருக்காரு ப்பா நீங்க அவர பாருங்க"
நாங்களும் மறுபடியும்  வழி தெரியாமல் வேறு எதோ ரூமிற்கு சென்றோம்.அங்கே ஒருவர் இருந்தார் அவர் Sub Inspector என்று பின்னால் தான் தெரிய வந்தது. அவர் என்னை குறு குறு என்று பார்த்தார்.பின்பு சில நகல் எடுத்து வர சொன்னார். பின்பு 1 மணி நேரம் நாட்டு நடப்பு பற்றி , அரசியல் பற்றி பிற காவலர்களும் சேர்ந்து அவரும் பேசினார்.அவர் பேசுவதற்கு நான் தலையை ஆட்டிகொண்டே இருந்தேன்.
பின்பு அவர் தம்பி "Inspector சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட், ரொம்ப டைம் ஆகும்  கிடைக்க 1  வாரம் ஆகும்  " என்று அவரே கையெழுத்து போட்டு கொடுத்தார்.
நான் கடவுளை நினைத்து கொண்டேன் உடனே சான்றிதல் கிடைத்ததற்கு.
பின்பு வீட்டிற்க்கு வேகமாக சென்று விட்டேன். அப்பா இதை மறக்கவே முடியாது. Sub inspector குறு குறு என்று பார்த்ததை மறக்கவே முடியாது.இதுவே முதல் காவல் அனுபவம்.           
 இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் !!!  

 

No comments:

Post a Comment