Saturday, July 16, 2011

சென்ற ஊரு பெங்களுரு

 என் இனிய நண்பர்களே,
சிலிர்க்க வைக்கும் காற்று
குழு குழு வானிலை 
பர பர என்று இருக்கும் சாலை 
ஆட்டோவைவிட வேகமாக செல்லும் மீட்டர் 
மாடர்ன் உடையில் உலா வரும் பெண்கள்
வானை முட்டும் விலைவாசி (மதுரையை விட)
சுத்தமான தெருக்கள் 
பிரம்மண்டம்மான தொழிற்சாலைகள் 
மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள் 
தினம் தினம் பெரிய பயணம் (அலுவல் செல்ல) 
இவையே நான் கண்ட பெங்களுரு. நான் In Plant Training  சென்ற இடம் தான் பெங்களுரு. நான் கடந்த மாதம் 19 முதல் 25 வரை சென்றேன்.நான் பயிற்சியில் தங்கியது என் நண்பன் ஸ்ரீராமின் அக்கா வீட்டில்.அவர்களும் என்னை நன்றாக கவனித்து கொண்டார்கள் .அதற்காக அவனிடமும் அவன் அக்காவிற்கும் மாமாவிற்கும் நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.இந்த பகுதியில் In Plant Training தவிர நான் சென்ற மற்ற இடங்களை பற்றி சொல்லபோறேன்.

யு பி சிட்டி மால்(UB City mall ):
முதலில் சென்றது இந்த யு பி சிட்டி மால் தான்.இதை கட்டியது விஜய் மல்லையா.( இவரின் கிங்க்பிஷர் பீர் என்றால் பிரபலம் ) .பிரம்மாண்டம்மான மால். இதனை பல கோடி கொடுத்து கட்டிருக்கிறார்.இந்த மாலில் வாங்கு வதற்கு பல லட்சம் தேவை.ஏனென்றால் இதில் விற்கும் பொருள் எல்லாம் உயர் ரக தரமான பொருட்கள்.இங்கு விற்கும் ரொலெக்ஸ் வாட்ச் ஆரம்பா விலை 16 லட்சம் இருக்கும்.அதனால் சாதாரண மக்களால் எதையும் வாங்க முடியாது. சுத்தி தான் பார்க்க முடியும். கலை ரசிப்பவர்களுக்கு அந்த இடம் ஒரு சொர்க்கம். அந்த இடத்தில நான் சென்ற போது ஓவிய போட்டியும் நடந்தது. விதவிதமான ஓவியங்கள் .அங்கு உள்ள ஓவியத்தின் ஆரம்ப விலை 60,000 ரூபாய்.இதை வைத்தே அந்த ஓவியத்தின் மதிப்பு தெரியும். 

                 
   
ஃபோரம் (Forum ):             
  இரண்டாவதாக சென்றது. இந்த மாலில் அதிகமாக சுற்றவில்லை.இதில் ஒரு சூப்பர் மார்க்கெட் தான் இருந்தது.இந்த மார்க்கெட்டில் ஸ்ரீராம் அக்கா சில பொருட்களை வாங்கினார். வேறு எதுவும் செய்யவில்லை.    


ஓயாசிஸ் (Oasis ):
 இது தான் நான் கடைசியாக சென்ற இடம்.இதில் நான் ஒரு புத்தகம் வாங்கினேன்.அதில் சிடி கடை, விளையாட்டு பொருட்கள் வாங்கும் கடை,ஜவுளி கடை ஆகியவற்றிற்கு சென்றோம். ஸ்ரீராம் சில பொருட்களை வாங்கினான்.


நான் பெங்குளுரு வந்தது முக்கியமாக In Plant trainig காக அதனால் அதிகமாக வெளியில் சுற்றவில்லை,நான் பின்னால் In Plant trainig பற்றி எழுதுகிறேன்.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!!!

3 comments: